slideshow

Sunday, October 24, 2010

pullanguzhal kodutha moongilgale-புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)
வண்டாடும் கங்கை மலர்த தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (வண்டாடும்)


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

பன்னீர்  மழை  சொரியும் மேகங்களே
 எங்கள் பரந்தாமன் மையழகை பாடுங்களே (பன்னீர் மழை)
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே (ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி)


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

குருவயூர்தன்னில் அவன் தவழ்கிழ்ன்றவன்
ஒரு கொடியோடு மதுராவை ஆள்கிள்றவன் (குருவாயூர்)
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்    (அந்த ஸ்ரீரங்கத்தில் 

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
பாஞ்சாலி  புகழ் காக்க தன் கை கொடுத்தான்
அன்று பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் (பாஞ்சாலி)
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் 
நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் (நாம் படிப்பதற்கு)

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
 
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே




       
in english:

Saturday, October 23, 2010

Kannadasanin varikal-கண்ணதாசனின் வரிகள்

கண்ணதாசன் பாரதிக்கு அஞ்சலி

ஆன்ற கவிஞர் அனைவோர்க்கும் முன்முதலாய்த்
தோன்றும் கவிதைச் சுடரொளியே! நீவாழ்க
பேசும் தமிழிற் பெரும்போருளைக் கூறிவிட்ட
வாசதமிழ்மலரே!வாரிதியே!நீவாழ்க!

தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கும் கவிக்கடலே!
பட்டமரந தழைக்க பாட்டெடுத்தோய்!நீவாழ்க!
எங்கே தமிழ் என்று என்தமிழர் தேடுகையில்
இங்கே தமிழென் றேடுத்துவந்தோய்! நீவாழ்க! 

கருக்கிருட்டில்  பாழ்குழியில் கால்பதித்த செந்தமிழை 
உருக்குமொளி மண்டபத்தில் உலவவிட்டோய்!நீவாழ்க! 
நெஞ்செலும்பு  கூடாகி நிலைகுலைந்த மானிடரை 
அஞ்சுதலை விட்டு அழைதுவந்தோய்!நீவாழ்க! 

மூட்டறுந்து கால்முடங்கி மூக்கா லழுதவரைக் 
கூட்டிவந்து  வேல்கொடுத்த கொற்றவனே! நீவாழ்க! 
நாடுமொழி  நாடாது நாடுவனக்  கேடாகக்
கூடெடுத்தோர மேனிக்குத் குருதிதந்தோய்! நீவாழ்க!

இமயமலை மேற்றொடங்கி இளம்குமரி எல்லைவரை 
தவழ்ந்துவரும் சந்திரனே! சாரதியே! நீவாழ்க!
என்று வரும் என்றே ஏங்கி நின்ற சுதந்திரத்தை 
கண்டவன்போல் பாடிவைத்த கற்பனையே! நீவாழ்க!

சேயாய் அகம்குளிர்ந்த சித்தனே!நீவாழ்க!
தாயின்மணிக்கொடியைத் தலைமேல் மிதக்கவிட்டுச்  
அங்கு
காலக் கடல் கடந்து கவிதை எனும் தோணியிலே
நீளவழி வந்தவனே!நித்திலமே!நீவாழ்க

பாரதத்தை வாழவைக்க பாட்டெழுதிப் பாட்டெழுதிப்
பூரதததில் ஏறிவிட்ட பொன்மகனே! நீவாழ்க!